உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

இணைய வகுப்பு

இணைய வகுப்பு


                  இணையவழி வகுப்புகள் வெளிநாடுகளில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் நோக்குடன் நூலகம் ( www.noolagam.com ) இணையதளத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றது. இணையவழி தமிழ் வகுப்புகள் ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

கற்பிக்கும் முறைகள்:
                  ஒவ்வொரு இணைய வகுப்புகளும் 50 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை பயிற்றுவிக்கபடுகிறது. இந்த காலநேரத்தில் முதல் 10 நிமிடங்களில் பொதுவான வழக்க தமிழில் உரையாடல் மேற்கொள்ளப்படும். அடுத்த 30 முதல் 35 நிமிடங்கள் வரை செம்மையான தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். இறுதி 10 நிமிடங்கள் கதைகள், பாடல்கள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படும்.
மின்னஞ்சல்கள்:
                  ஒவ்வொரு குழந்தையின் முதல் தமிழ் வகுப்பு முடிந்த பின்னரும் பாராட்டுச் சான்றிதழ் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். இதே போல் ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் வீட்டில் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் வீட்டுப் பாடங்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும். மேலும் ஒவ்வொரு குழந்தையின் தமிழ் வகுப்பிற்கு முன்னதாக நினைவு மின்னஞ்சல் அனுப்பப்படும். இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் தமிழ் வகுப்பில் பங்கேற்கும் குழந்தையின் பெற்றோரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இணைய வகுப்பின் வழித்தடங்கள்:
                  நேரடி இணையவழி வகுப்புகள் ஸ்கைபி - SKYPE என்ற மென்பொருள் வழியாக நடத்தபடுகின்றது. இது இலவச மென்பொருளாகும்.
மாற்று வழித்தடங்கள்:
                  ஸ்கைபி SKYPE மென்பொருள்கள் செயல்படாத நாடுகளில் மாற்று வழிகள் மேற்கொள்ளப்படும். அவையாவன: அடோபி அக்ரோபட் - ADOBE ACROBAT, வெபெக்ஸ் - WEBEX உள்ளிட்ட மென்பொருள்கள் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்படும்.

உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

 முகப்பு~  இணைய வகுப்பு (Online Class)~  கட்டண விபரங்கள் (Fees Structure)~  நற்சான்றுகள்~  பாராட்டுப்புள்ளிகள்~  தொடர்புக்கு

World Tamil Academy ©www.tamilacademy.com